• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கேப்டனாக ரோகித் சர்மா ஏன்? – கங்குலி விளக்கம்

Byமதி

Dec 10, 2021

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி சமீபத்தில் விலகியதால், இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கும் தற்போது ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறும்போது, விராட் கோலியிடம் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து, இரண்டு கேப்டன்களை வைத்திருப்பது சரியானதாக இருக்காது என அணி தேர்வர்கள் கருதினர். எனவே ஒருநாள் தொடரிலும் ரோகித்தை ஒருநாள் தொடரின் கேப்டனாக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நீடிப்பார் என தெரிவித்தார்.