• Fri. Apr 19th, 2024

ரூ.75 நாணயம் கருப்பு நிறமாக இருப்பது ஏன்?

ByA.Tamilselvan

May 28, 2023

இந்திய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நாணயத்தை வேறுபடுத்தி காட்டுவதற்காக இதற்கு கருப்பு நிறம் கொடுத்து உள்ளனர்.
இந்த நாணயம் 44 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவில் இருக்கும். அதன் விளிம்புகளில் 200 சீர்வரிசைகளாக கோடுகளை கொண்டிருக்கும். 35 கிராம் எடை கொண்ட நாணயம் ஆகும் இது. இதில் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவை உள்ளன. உலோகங்கள் கலந்த அலாய் காயின் ஆகும் இது.
இந்த கலப்பு காரணமாக தானாக இது கருப்பு நிறம் கிடைத்துள்ளது. ஆனால் பொதுவாக கருப்பு நிறம் வந்ததும் இதை பாலிஸ் செய்து வெள்ளையாக்குவார்கள். ஆனால் இங்கே அப்படியே கருப்பு நிறத்தில் வெளியிட்டு உள்ளனர். சிறப்பு நாணயம் என்பதால் வேறுபடுத்தி கட்டுவதற்காக இதை கருப்பு நிறத்தில் வெளியிட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *