• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தகாத வார்த்தை பேசும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ByK Kaliraj

Oct 1, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து தாயில்பட்டி வழியாக சாத்தூர் செல்லும் அரசு பஸ் வண்டி TN67 N1503 பதிவு எண் கொண்ட அரசு பஸ்ஸில் டிரைவராக பணியாற்றும் ஜெயக்குமார் வழக்கமாக இயக்கப்படும் நேரத்திற்கு முன்பாகவே பஸ் இயக்குவதால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சிரமப்படுகின்றனர். மேலும் முதியவர்கள் ஏறினால் கடிந்த சொற்களால் பேசுகிறார்.

இதுகுறித்து சிவகாசி மற்றும் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் செய்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. டிரைவர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்?