• Thu. Apr 25th, 2024

எடப்பாடி பழனிசாமி வாக்களிக்காதது ஏன்?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் அரசியல் பிரமுகர்களும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தீவிர பரப்பபுரையில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் பயணித்து அவர் வாக்குசேகரித்தார். வாக்குப்பதிவு நாளான நேற்று முதலமைச்சர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட தலைவர்கள் வாக்களித்தனர்.

ஆனால், நேற்றைய தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வாக்களிக்கவில்லை. இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய முதல்வராக இருந்த பழனிசாமி எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் வாக்களித்தார்.

தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அவருக்கான வாக்குரிமை, தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ளது. இக்கிராமம் ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு உட்பட்டதாகும். இதனால், நேற்றைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாக்களிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *