• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

கமலின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி வரும் 14-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்கபோகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், தற்போதைய தகவல்படி கமலின் அடுத்த படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் – முத்தையா கூட்டணி இணைந்தால் விருமாண்டி திரைப்படம் போல ஒரு திரைப்படம் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.. முத்தையா தற்போது நடிகர் கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு கமல்ஹாசனின் திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.