• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி..,

ByS. SRIDHAR

Oct 27, 2026

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற tvது மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சார்பில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர் பேரணியை கல்லூரி முதல்வர்அலுவலகம் முன்பு கல்லூரி முதல்வர் மணி துவக்கி வைத்தார்.

கல்லூரி வளாகம் முழுவதும் ஊர்வலமாக சென்ற மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் கையில் பிங்க் கலர் பலூன்களை ஏந்தியபடி,

மார்பகத்தில் வலியில்லாத கட்டிகள், மார்பக காம்பு பகுதியில் ரத்தம் மற்றும் நீர் வடிதல், மார்பகப் பகுதியில் சிவந்த தோல் குழி விழுதல், மார்பகப் பகுதியில் ஆறாத புண் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு உரையாற்றியபடி சென்றனர்.

உள் நோயாளி பிரிவு முன்பு ஊர்வலமாக சென்று அனைவரும் கையில் வைத்திருந்த பலூன்களை வானில் பறக்க விட்டனர் அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.