இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முக்கிய வீராங்கனையான மித்தாலிராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ‘சபாஷ் மிது’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.