• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நயனுடன் அடுத்து ஜோடி சேரப்போவது யார்?

டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் நயன்தாரா. தற்போது, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மீண்டும் தனி ஒருவன் பட டீமில் நயன்தாராவும் இணைய போகிறாராம். பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வரும் ஜெயம் ரவி, டைரக்டர் அகமது இயக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க போகிறாராம். முன்னதாக, ஜெயம் ரவியை வைத்து ஜன கன மன படத்தை இயக்கி வந்தார் அகமது. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராணுவ அதிகாரி ரோலில் நடித்து வந்தார். ஆனால் கொரோனா, லாக்டவுன் காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

2021 ல் ஜன கன மன இல்லாமல் அகமது இயக்கும் மற்றொரு படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதா இல்லை ஜன கன மன படம் தானா என எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது, ஜெயம் ரவி- அகமது கூட்டணியில் பெயரிடப்படாத படம் ஒன்றில் தனி ஒருவன் பட டீம் மீண்டும் இணைய உள்ளதாம். ஜெஆர் 29 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தான் நயன்தாரா நடிக்கிறாராம்

ஜெஆர்29 படம் இந்தியாவிலேயே படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் ஷுட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்..