• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சிம்பு50 படத்தின் இயக்குனர் யார்?

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சிம்பு. இவர் நடித்து, சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் நார்தன் இயக்கத்தில் பத்து தல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், சிம்பு!

இந்நிலையில், சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு இளைஞன் உலகம் முழுவதும் சுற்றுவதால் ஏற்படும் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளும் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.