

நடிகர் அஜித்குமார், தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
அடுத்தாக, இந்த படங்களை தொடர்ந்து அஜித்தின் 63- வது படத்தை அவரை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாவே இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த இயக்குனர் சிவாவிடம் அஜித்தின் 63வது திரைப்படத்தை இயக்குகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சிவா “இதை அஜித் சாரே அதிகாரப்பூர்வமாகச் சொல்லுவார்” என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

