விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக்வித்கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். தற்போது அஜித்,சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்!
இந்நிலையில் புகழ் ஹீரோவாக ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார்! அந்த படத்தை இயக்குனர் ஜே.சுரேஷ் இயக்கி வருகிறார். இவர் மாதவனை வைத்து என்னவளே படத்தை இயக்கியிருந்தார்.
புகழ் நடிக்கும் இந்த படத்திற்கு “Mr. Zoo keeper” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் புகழிற்கு ஜோடியாக நடிகை ஷிரின் காஞ்சவாலா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான அறிவிப்பு நேற்று பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது போஸ்டரில், புகழ் கையில் கிளியுடன் காட்டிற்குள் அமர்ந்திருப்பது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று ஊட்டியில் தொடங்கப்பட்டது. பின்னர் படக்குழு அடுத்த செட்யூலுக்கு பிலிப்பைன்ஸுக்குச் செல்லுவதாக கூறப்படுகிறது.