‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு ராஜா முதல் வெற்றிமாறன் வரை என ஒரு பெரிய லிஸ்ட்டே ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
‘அண்ணாத்த’ படம் கடந்த தீபாவளிக்கு வெளியான நிலையில், டிசம்பர் மாதமே அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது! ஆனால், தற்போது வரை இயக்குநர்கள் பெயர்கள் மட்டுமே வரும் நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது யார் என்று இதுவரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை!
கடந்த தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதற்காக அந்த படத்தை இயக்கிய இயக்குநர் சிவா மற்றும் அந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தங்க செயின் பரிசாக வழங்கினார்.
துல்கர் சல்மான், ரிது வர்மா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குவார் என ஆரம்பத்தில் பேசப்பட்டது. அவரும் ஒரு கதையை சன் பிக்சர்ஸ்க்கு சொல்ல அந்த படத்தின் பட்ஜெட் ஒத்துவராததால் அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
டாக்டர், பீஸ்ட் என பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் இளம் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை வைத்து சன் பிக்சர்ஸ் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வந்தன. ஆனால், தற்போது நெல்சனை தவிர்த்து வேறு பல பெயர்களும் அடிபட்டு வருகின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை, எதற்கும் துணிந்தவன் படங்களை இயக்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் தகவல்கள் பரவின. ஆனால், அப்படியொரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகிறார் என்றும் ரூமர்கள் கிளம்பின.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேசிங்கு ராஜா, நெல்சன், பாண்டிராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது இளையராஜா மற்றும் கலைப்புலி எஸ். தாணு இணைந்து தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போவதாக புதிய தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த படத்தை தனுஷின் ஷமிதாப் படத்தை இயக்கிய பால்கி இயக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிலும் மாற்றம் வந்துள்ளது.
இயக்குநர் பால்கி இயக்குவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பால்கி இல்லையாம் வெற்றிமாறன் அந்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் எதிரொலித்து வருகின்றன. சூர்யாவின் வாடிவாசல் படம் தாமதமாகும் சூழலில் ரஜினியை வைத்து ஒரு படத்தை குறைவான நாட்களில் எடுத்து முடிக்கப் போகிறார் என்றும் சொல்கின்றனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காதா? என இயக்குநர்கள் முண்டியடித்து கொண்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த பட வாய்ப்பு எந்த இயக்குநருக்கு செல்லப் போகிறது என்பது தான் கோலிவுட்டின் உச்சபட்ச டாக்காக மாறியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இப்படி எத்தனை இயக்குநர்கள் பெயர் அடிபடும் என்று தெரியவில்லை.
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]
- புதிய கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை […]
- முகம் வெள்ளையாக:பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் […]
- மகிந்த ராஜபக்சேவிடம் 5 மணி நேரம் விசாரணை-கைதாக வாய்ப்பு?இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிடம்5 மணி […]
- காலிஃப்ளவர் மசாலா:தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது […]
- பெட்ரோல் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டுவிட்பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் […]
- சிந்தனைத் துளிகள்• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் […]
- பொது அறிவு வினா விடைகள்1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா3.யுவான் […]
- குறள் 214:ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.பொருள் (மு.வ):ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் […]
- இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஒவைசி செய்கிறார்- பாஜக தலைவர்ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை இந்திய மக்களை பிரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். […]
- மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து […]