

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூமாப்பட்டியில் அதிமுக தொகுதி கழகம் வத்திராயிருப்பு ஒன்றிய கழகம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.மான்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூட்டத்தில் சிறப்புரை ஆற்றும் போது,
7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மெடிக்கல் கல்லூரிக்கு இல்லாத வீட்டு பிள்ளைகள் சேர்ந்து படிக்கிறார்கள் .ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்யப்படும் என தெரிவித்து ரத்து செய்ய முடியவில்லை அதற்கு மாற்று வழியைத்தான் எடப்பாடி பழனிச்சாமி செய்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியிலே ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் .
நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்காமல் நாட்டு மக்களை சிதைக்கின்ற அரசு ஸ்டாலின் அரசு.
திமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையாக குறைந்து கொண்டு மூடுவிழா கண்டு வருகிறது.காரணம் திமுக கட்சியால் ஆளத் தெரியவில்லை வழிநடத்த தெரியவில்லை.

மக்கள் விழித்திருக்க வேண்டிய காலம் இது.மக்களை ஏமாற்றி ஏமாற்றி தான் திமுக ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வருகிறது.ஒருமுறை கூட நியாயத்தைச் சொல்லி உண்மையைச் சொல்லி திமுக ஓட்டு கேட்ட வரலாறு கிடையாது.525 தேர்தல் அறிக்கை கூறினார்கள் உன் எதையுமே உருப்படியாக நிறைவேற்றவில்லை.
அதிமுக ஆட்சியில் ஓட்டு போட்ட மக்களுக்காக நாங்கள் பயந்து பயந்து வேலை செய்வோம்.திமுக பயமே கிடையாது எந்த வேலையும் செய்வது கிடையாது.
இன்று நான் சொல்கிறேன் 2026-ல் எடப்பாடி முதலமைச்சராக வரப்போகிறார்.அதிமுக தான் ஆளப்போகிறது.பாட்டாளிகள் படைப்பாளிகள் உழைப்பாளிகள் அனைவருடைய பிரச்சனையை எடப்பாடி பழனிச்சாமி தீர்த்து வைப்பார்.
சில பேர் ஒன்று சேருங்கள் என கூறுகிறார்கள் அதிமுக -வில் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள்.அதிமுக சிறு சிறு பிரச்சனை இருக்கு அதை எடப்பாடி பழனிச்சாமி சரி செய்து விடுவார்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தான் ஆட்சிக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி வாழ்கின்ற வரை அவர்தான் முதலமைச்சராக இருப்பார்.தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வார்.
ஏழைகளுக்கு வந்துசேர்ந்த அத்தனை உதவிகளையும் நிறுத்திய ஆட்சி திமுக ஆட்சி .ஏழைகள் இன்னும் தமிழகத்தில் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். ஏழைகள் இல்லாமல் நாடு முன்னேற வேண்டுமென்றால் இல்லாதவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
கொடுக்கின்ற எண்ணம் படைத்த கட்சி அதிமுக கொடுப்பதை கெடுக்கின்ற கட்சி திமுக.
எம்ஜிஆர் ஜெயலலிதா போன்று பிறருக்கு உதவும் குணம் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி.ஜாதி வேற்றுமை இல்லாமல் அனைத்து சமூகத்தையும் ஒன்றாக பாவிக்கின்ற எடப்பாடியார் ஆட்சி அமைப்பதற்கு ஒட்டுமொத்தமாக நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமரப் போகிறார்” என பேசினார். கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். சந்திர பிரபா முத்தையா, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.வசந்தி மான்ராஜ், ஸ்ரீவில்லி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குறிஞ்சி வி.முருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வி.டி. முத்துராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் டி.முத்தையா, ஸ்ரீவில்லி முன்னாள் யூனியன் தலைவர் நக்கமங்கலம் கே. காளிமுத்து, எஸ். கொடிக்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் பாண்டியம்மாள், மணி, சுப்புலட்சுமி, சேது வர்மன் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் மோதிரம் பொன்னுச்சாமி, மற்றும் எஸ். கொடிக்குளம் பேரூர் கழக நிர்வாகிகள் வத்திராயிருப்பு ஒன்றிய நிர்வாகிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கிழக்கு, வடக்கு, தெற்கு நகர நிர்வாகிகள் மம்சாபுரம் பேரூராட்சி, வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், வ. புதுப்பட்டி கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர்கள் கே. எஸ்.சுப்புராஜ், ஏ.வி அழகர்சாமி, வத்திராயிருப்பு கழகச் செயலாளர் வைகுண்ட மூர்த்தி, சுந்தரபாண்டியம் கழகச் செயலாளர் மாரிமுத்து, வ. புதுப்பட்டி கழக செயலாளர் ஜெயகிரி, மம்சபுரம் கழக செயலாளர் நாகராஜன், ஆகியோர் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி.எம். சேதுவர்மன், எஸ். கொடிக்குளம் கழக செயலாளர் என். சங்கரமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

