

வாட்ஸ் அப்-இல் தனக்கு தானே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் புதிய வசதி வர உள்ளது.
டெலிகிராம் செயலில் ஏற்கனவே இந்த வசதி இருக்கிறது. தற்போது வாட்ஸ் அப்-இல் இந்த வசதியை கொண்டு வர உள்ளனர். இப்போது அவசரமாக ஒரு எண்ணை சேமிக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவருக்கு செய்தியாக அனுப்பி விட்டு பின்னர் அதை குறித்துக் கொள்வோம். டெலிகிராமில் saved messages என்ற தலைப்புடன் அமையும் சாட்டில் தனக்கு தானே செய்தி அனுப்பிக்கொள்ளலாம். அது போல இப்போது வாட்ஸ் அப்பில் பயனருடைய எண் ‘me’ என்று வரும்.
அதில் அவர் தனது குறிப்புகளை அனுப்பி சேமித்துக் கொள்ளலாம். இது பயனர்களுக்கு பேருதவியாக இருக்கும். ஏதேனும் லிங்குகளை சேமிக்கவும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அப்டேட்டின் விவரங்கள் WABetainfo வழியாக வெளிவந்துள்ளன. வாட்ஸ் அப்பின் பீட்டா ஆண்ட்ராய்டு பதிப்பு 2.22.24.2 இந்த புதிய மெசேஜ் அம்சத்தைக் கொண்டு வெளியிடப்படும். இந்த அம்சம் தற்போதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதில் ஏற்படும் சோதனை பிழைகள் சரி செய்யப்பட்டவுடன், Whatsapp அதை வரும் வாரங்களில் அனைவருக்கும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
