*”Party Fund வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்தான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது” – முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
“என் டேபிளில் உள்ள 3 பைல்களை ஓபன் பண்ணுவதற்கு முன் இன்று ஒரு சாம்பிள்.. திமுக அரசுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய டாக்குமென்ட் என்னிடம் உள்ளது..” – முதலமைச்சர் விஜய் சட்டசபையில் பேசிய பேச்சு அனைவரிடத்திலும் பரபரப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கியதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.
பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதிதான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத் துறை கூறியது.
சர்காரியா கமிஷன் எழுதிய புத்தகம் சட்டமன்ற நூலகத்தில் உள்ளது, அதை எடுத்து படித்தால் திமுகவின் ஊழல்கள் தெரியும்.
கரூர் கேங்க் என்ற பெயரில் வசூலில் ஈடுபட்டுள்ளனர்; முறைகேட்டையே முறையாக திமுகவினர் செய்துள்ளனர்.
தனது அதிகாரத்தை செந்தில் பாலாஜி தவறாக பயன்படுத்தியுள்ளார்; விஞ்ஞான ஊழல் என்பதும் இதில்தான் வரும்.
திமுக எதை செய்தாலும் குடும்பமாக சேர்ந்துதான் செய்வார்கள் போல.

கலைஞர் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது, நான் அமலாக்கத்துறை அறிக்கையைத் தான் பேசுகிறேன்.
முதலமைச்சர் பதவியை கலைஞர் கருணாநிதி தவறாக பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை அறிக்கை அளித்துள்ளதாக ஆதாரத்தை காட்டி உணர்ச்சி பொங்க முதலமைச்சர் விஜய் பேசினார்.








