• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அழகு எதில் உள்ளது?

Byவிஷா

Oct 25, 2021

ஒரு ராஜா அழகான குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். அந்தக் குதிரைக்கு தான் இன்னும் அழகாகனும்னு ஆசை வந்து கடவுளிடம் வேண்டிக் கொண்டது.


உடனே கடவுள் குதிரையின் முன்னால் தோன்றி ‘உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார். குதிரை நான் இன்னும் அழகாகனும் அதனால என் கழுத்தையும், கால்களையும் நீளமாகவும் படைக்க வேண்டும் என்று கேட்டது.


கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும், கால்களையும் நீளமாகப் படைத்தார். குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது. தன் உருவத்தை பார்த்த குதிரைக்கு அழுகையே வந்து விட்டது.


அய்யோ! கடவுளே என்னை பழைய மாதிரியே மாற்றிவிடுங்கள் என்று கேட்டது குதிரை. நீ விரும்பிய மாதிரி தான் உன்னை படைத்துள்ளேன், பிறகு ஏன் வருத்தபடுகிறாய் என்று கேட்டார்.
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக படைத்துள்ளேன். உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும். ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும் அதிகமாக பொதி சுமக்க முடியும்.
அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித்தான் போய் முடியும் என்றார்.

இந்தக் கதையானது, “அழகு என்பது உருவத்தில் அல்ல நீ செய்யும் செயலில்”தான் உள்ளது என்கிற கருத்தை நமக்குப் புரிய வைக்கிறது.