• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கட்சிக்கு தலைமை கோமாளியாக இருந்தால் என்ன செய்வது-அமைச்சர் செந்தில் பாலாஜி

ByA.Tamilselvan

Apr 15, 2023

கட்சிக்கு தலைமை கோமாளியாக இருந்தால் என்ன செய்வதுஎன பாஜக தலைவரை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் எவரும் பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும், இந்த எக்ஸல் ஷீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது என்றும் கேள்வி எழுப்பினார். அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம் ரூபாய் என்று கூறிய செந்தில் பாலாஜி, ஒருமாதம் உதவி செய்யலாம், வருடம் முழுக்க யார் உதவி செய்வார்கள் என்று வினவினார். பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகின்றதா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கட்சி தேசிய கட்சியாக இருக்கலாம், அந்த கட்சிக்கு தலைமை கோமாளியாக இருந்தால் என்ன செய்வது, தேசிய கட்சியில் இருந்தால் மட்டும் எல்லாம் வந்து விடுமா எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார். சாப்பாடு,பெட்ரோல், சம்பளம், வீடு, மூளை எல்லாமே அவருக்கு ஓசியாக இருக்கின்றது என காட்டமாக பேசிய செந்தில் பாலாஜி, தேர்தல் ஆணையத்தில் கொடுத்த சொத்து ஆவணங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். முதல்வர் அனுமதி பெற்று நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தொடர இருப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு பொய்யை மறைக்க அவர் நூறு பொய்யை சொல்கிறார் என்றார்.