• Wed. Apr 24th, 2024

மும்பையை சேர்ந்த ராணுவ வீரருக்கு, குமரியில் வரவேற்பு!

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் மறுவாழ்வு மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் மலைவாழ் மக்களுடைய பள்ளிகளை மேம்படுத்தவும், நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியும், காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 70 நாட்களாக சாலை மார்க்கமாக ஓடி இன்று கன்னியாகுமரி வந்து சேர்ந்த 61 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற மும்பையை சேர்ந்த ராணுவ வீரருக்கு கன்னியாகுமரியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது!

இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று மும்பையை சேர்ந்த 61 வயதான குமார் அஜ்வானி, இந்திய ராணுவத்தில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் மறுவாழ்வு மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் மலைவாழ் மக்களின் பள்ளிக்கூடங்கள் மேம்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சாலை மார்க்கமாக ஓட திட்டமிட்டு, இன்று கன்னியாகுமரி வந்து தன்னுடைய சாதனையை நிறைவு செய்தார்!

உலக சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்த கோரிக்கை விழிப்புணர்வில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3800 கிலோ மீட்டர் தூரத்தை 70 நாட்களாக இடைவிடாமல் ஓடி இன்று கன்னியாகுமரி வந்து சேர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *