திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் CPIM வேட்பாளராக சச்சிதானந்தம் தேர்வு செய்யப்பட்ட பின் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்று இன்று சொந்த ஊருக்கு வரும் வழியில் வேட்பாளர் சச்சிதானந்தம் சொந்த ஊரான கட்டசின்னாம்பட்டி பகுதி கிராம மக்கள் இளைஞர்கள் 200க்கும் மேற்கொண்டார் ரெட்டியார்சத்திரம், எல்லைப்பட்டி, இராமலிங்கம்பட்டி வழியாக வேட்பாளரை திறந்த வெளி வாகனத்தில் அழைத்து வந்து மேளதாளத்துடன் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சொந்த ஊருக்கு செல்லும் வழியில் இராமலிங்கம்பட்டி அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் வேட்பாளர் சச்சிதானந்தம் சாமி தரிசனம் செய்துவிட்டு கிராம மக்கள் சொந்த ஊருக்கு வேட்பாளரை உற்சாகத்துடன் அழைத்து சென்றனர்.