

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முன்னதாக அறிவித்து நாம் தமிழர் கட்சியினர், பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சிவகங்கை நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளரான எழிலரசி சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தெருமுனை பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். இதன் ஒரு பகுதியாக தனது ஆதரவாளர்களுடன் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்திலும், மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் உள்ள அவர்களது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தெருமுனைப் பிரச்சாரத்தை துவைக்கினார். அப்போது அடுத்த தலைமுறையினரும் நலமுட வாழவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வாக்காளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை பாதுகாப்பாக வளர்க்கும் படி கேட்டுக் கொண்டார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று தெருமுனைப் பிரச்சாரத்தை எழிலரசி மேற்கொண்டார். தேர்தல் சின்னம் அறிவிக்காத நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சுறுசுறுப்பாக பிரச்சாரத்தை துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.



