• Fri. Jan 17th, 2025

உசிலம்பட்டி அருகே தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பணப்பட்டு வாடாவை துவங்கிய அதிமுக ஓபிஎஸ் அணி எம்எல்ஏ-வால் பரபரப்பு

ByP.Thangapandi

Mar 17, 2024

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது., இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தேதி அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அமலுக்குள் வர உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேட்டி, சேலை மற்றும் அதிமுக இரட்டை இலை சின்னம் பொருந்திய கவரில் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தேர்தல் தேதி அறிவிக்க உள்ள சூழலில் அரசியல் கட்சியினர் எப்போதும் போல பணப்பட்டுவாடாவை துவங்கியுள்ளனரா என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.