• Thu. Apr 24th, 2025

வாரணாசியில் உள்ள சாராயக் கடைகளில்பிரதமர் மோடியின் படத்தை வைப்போம்-நாஞ்சில் சம்பத் பேச்சு..

குமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.ஆல்பனின் 26_ வது ஆண்டு நினைவு நாள் கூட்டத்தில், சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் அவரது பேச்சில்,

பாரதிய ஜனதா செங்கோட்டையனை அதிமுக தலைமை பொறுப்புக்கு கொண்டு வர முயல்கிறது செங்கோட்டையன் அந்த பொறுப்புக்கு தகுதியானவர் பாரதிய ஜனதாவை விட அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்று ஒரு திராவிட இயக்க சிந்தனையாளராக இதை நான் விரும்புகிறேன். அப்படி செங்கோட்டையன் தலைமை பொறுப்பேற்றால் அதிமுக வலிவும் பொலிவும் பெரும் ஆற்றூரில் நாஞ்சில்சம்பத் பேட்டி,

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆல்பன் 26 ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் ஆற்றூர் சந்திப்பில் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசினார் தொடர்ந்து அவர் செய்தியாளிடம் பேசுகையில்,
திமுகவைப் பொறுத்தவரையில் 1967ல் அண்ணா முதலமைச்சர் 19 71இல் கலைஞர் முதலமைச்சர் ஆனால் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி பொறுப்பை இதுவரை ஏற்றதில்லை. ஆனால் 2001 இல் ஸ்டாலின் முதல்வரானார் ஆனால் வரும் 2026 தேர்தலிலும் ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார் அந்த அதிசயத்தை நாங்கள் நடத்தி காட்டுவோம்.

பாரதிய ஜனதாவின் B டீம் தான் தாவேகா என அண்ணாமலை கூறுவதை பொறுத்தவரையில் பாஜாவிற்கு எந்தசுவரில் முட்டுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. திட்டமிட்டு தமிழகம் நிராகரிக்கப்படுகிறது புறக்கணிக்கப்படுகிறது அதற்காக குரல் கொடுப்பதற்கு பிஜேபி கட்சிக்கு ஆண்மை இல்லை அதிலும் குறிப்பாக அண்ணாமலைக்கு இல்லை. இதை திசை திருப்புவதற்கு தம்பி விஜய் பிஜேபியின் B டி எம் என்று சொல்கிறார் மன்னர் ஆட்சி நடக்கிறது என்று திமுக மீது கல் எறிந்தவர்கள் அவர்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதா தான் முதன்மையான சக்தி என்று கூறியவர் அவர்கள்.

ஆனால் நூறு வருட பாரம்பரியம் கொண்ட திராவிடத்தை எதிர்த்து தான் அரசியல் செய்வேன் என்று கூறியவர் விஜய் திமுக விற்கும் பாஜகவுக்கும் எந்த ரகசிய காதலும் இல்லை மத்தியிலும் எங்களுடைய எம்பிக்கள் மத்தியில் குவிந்து கிடக்கின்ற அதிகாரத்தை அடித்து நொறுக்க அதற்கு எதிராகத்தான் குரல் கொடுக்கிறார்கள். குரல் கொடுக்க மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானி பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்கள். அதனால்தான் தர்மேந்திர பிரதான் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கூறினார் இதை செய்ய டெல்லியில் கனிமொழி உள்ளார் மற்ற எம்பிக்கள் உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் படத்தை பாஜக பொருத்தம் என்று சொன்னால் நாங்கள் வாரணாசியில் உள்ள சாராயக் கடைகளில் மோடியின் படங்களை பொருத்துவோம். மக்கள் தொகை கணக்கீட்டின்படி தொகுதி சீரமைப்பில் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து தமிழக முதல்வர் எடுக்கும் நடவடிக்கைக்கு தற்பொழுது தேசிய அளவில் 20 கட்சியில் ஆதரவு தெரிவித்துள்ளன இப்படி பிஜேபிக்கு அடுத்த படி தேசிய அளவில் தமிழக முதல்வர் கவனம் பெறுகிறார்.

அதிமுக தலைமை பொறுப்பிற்கு செங்கோட்டை அணி கொண்டு வருவதற்கு பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது செங்கோட்டையன் அதற்கு தகுதியானவர். அப்படி அவர் தலைவர் ஆனால் அதிமுக வலிவும் பொலிவும் பெறும் பாரதிய ஜனதா கட்சியை விட அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்று ஒரு திராவிட இயக்க சிந்தனையாளராக நான் விரும்புகிறேன். அவர் பொதுச் செயலாளர் அதிமுக உயிர் பெறும் என சொல்லி வைக்கிறேன் என அவர் தெரிவித்தார்.