• Sat. Sep 23rd, 2023

கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம்- அமைச்சர் பொன்முடி

Byகாயத்ரி

Mar 23, 2022

அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும் பொது நுழைவுத் தேர்வு வாயிலாகவே 2022-2023 ஆம் வருடத்துக்கான மாணவர் சேர்க்கையானது நடைபெற வேண்டும் என்று யு.ஜி.சி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மத்திய பல்கலைக்கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு வாயிலாகவோ, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கமாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed