Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் இனி 10 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.
Zomato நிறுவனத்தின் சராசரி டெலிவரி நேரம் 30 நிமிடங்கள் என்பதால் இதனை குறைக்க வேண்டி இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் இனி 10 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். அதோடு உணவின் தரம் – 10/10, டெலிவரி செய்யும் நபரின் பாதுகாப்பு – 10/10 மற்றும் டெலிவரி நேரம் – 10 நிமிடங்கள் என அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானது முதலே நெட்டிசன்கள் மீம் மூலம் இதனை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர். இதனால் #Zomato டிவிட்டரில் அதி வேகமாக டிரெண்டாகி வருகிறது.