• Fri. Oct 11th, 2024

உண்மையை சொல்லிருக்கிறார் ஓபிஎஸ் – சசிகலா

கடவுளுக்கு தெரிந்த உண்மை நேற்று ஓபிஎஸ் மூலம் மக்களுக்கும் தெரிந்து விட்டது என சசிகலா பேட்டி.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தியது. அப்போது, ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என்றும் சசிகலா மீது மரியாதை அபிமானம் வைத்திருப்பதாகவும் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உண்மையை தான் கூறியிருக்கிறார் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, என் மீது மதிப்பு இருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் உண்மையை சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், உண்மை என்ன என்பது குறித்து எனக்கும், பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆறுமுகசாமி ஆணையம் ஆரம்பித்தது நல்லதுதான். கழகத்தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ்-க்கு தெரிந்த உண்மை, நேற்று மக்களுக்கும் தெரிய வந்துள்ளது. உண்மைகள் காலதாமதமாக வரலாமே தவிர, அதை மாற்றவோ, மறைக்கவோ முடியாது. பொதுமக்களும் உண்மையைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நான் நினைத்து சொல்லி வந்தேன். நேற்றைய நிகழ்வுகள் அதை நிருபித்துள்ளது. ஓபிஎஸ் உண்மைச் சொல்லியிருக்கிறார். என்னுடைய அடுத்த செயல்பாடுகள் நிதானமாக இருக்கும் என்றும் சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *