கோவை ஆர்.எஸ்.புறம் மாநகராட்சி கலையரங்கில் திருமாவேலன் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டுள்ளார்.
விழாவில் பேசிய அவர், ‘திராவிட இயக்கம் தான் தமிழ் மொழி பற்றை தனக்குள் வைத்ததாகவும், தமிழர்களாகிய நமக்கு தமிழ் மொழி மிக முக்கியமான தான். ஆனால் ஆங்கிலத்தை நாம் அரவணைக்காவிட்டால் ஹிந்தி உள்ளே நுழைந்து விடும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் பிழைப்பதற்காக செல்கின்ற இடத்தில் எந்த மொழி தேவைப்படுகிறதோ அதனை கற்றுக்கொள்ளலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு போனால் யாரும் சொல்லவே தேவையில்லை, ஹிந்தி கற்றுக் கொள்ளலாம். ஆனால் கேரளாவிற்கு வேலைக்கு செல்வதற்கு எதற்கு ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் பேசியுள்ளார்.