தேனி அல்லிநகரம் நகராட்சி கிளைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி கிளைக் கூட்டம் ஏஐடியுசி தேனி மாவட்ட அலுவலகத்தில் கௌரவ தலைவர் தோழர் கே. பிச்சைமுத்து தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தை மாவட்ட செயலாளர் எம்.எஸ்.பி. ராஜ்குமார், செயல் தலைவர் எம். கர்ணன் ஆகியோர் பங்கேற்று வழி நடத்தினர்.
இக் கூட்டத்தில் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக.தலைவர் கே.பிச்சைமுத்து
செயலாளர் எம். சந்திரசேகரன்,பொருளாளர் எம். ஈஸ்வரன்
துணைத் தலைவர் பி. முருகேசன்,துணை செயலாளர் எம். கருப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும்
கிளை நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கே.எஸ். மகேந்திரன்
எம். தேவி,எஸ். மூர்த்தி,தேர்வாகினர்.
மேலும் இக்கூட்டத்தில் மத்திய ,மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்
- வார விடுமுறையை ஊதியத்துடன் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.
- மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்கள் அவர்கள் எந்த பெயரில் வைக்கப்பட்டிருந்தாலும் ஊதியம் வழங்கிய வங்கி கணக்கு ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு காலமுறை ஊதியம் நிர்ணயித்து பணி நிரந்தரம் வேண்டும்.
- மத்திய அரசு, 44 தொழிலாளர்கள் சட்டங்களை 4 தொகுப்பாக குறிக்கியதை வாபஸ் வாங்க வேண்டும்.
- கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும் . உள்ளிட்ட 5 அம்சகோரிக்கைகளை ஏஐடியுசி தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறது.