பொள்ளாச்சி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தவறாக பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினரின் வேட்பு மனு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டது.
பொள்ளாச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பெண்கள் போட்டியிடக்கூடிய பெண்கள் வார்டுகளுக்கான 31 மற்றும் 34 ஆகிய வார்டுகளில்நாம் தமிழர் கட்சியின் ஆண் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் பிப்ரவரி 5ம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தவறாக வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினர் இரண்டுபேரின் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 2 வேட்பு மனுக்கள் நிராகரிகரிக்கப்பட்டது.