மின்தடையால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இரண்டு நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. பழுதடைந்த மின்கம்பத்தை மின் ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.
டிசம்பர் 17 ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் தலைமை நீரேற்று நிலையம் உள்ளது. அதன் உட்பகுதியில் மரக்கிளை முறிந்து மின் கம்பம் பழுதடைந்ததால் மின்சாரம் இரண்டு நாட்களாக துண்டிப்பு செய்யப்பட்டது .இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் குடிநீர் வினியோகம் இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்டது . மின் தடையை உடனடியாக சரி செய்ய நகராட்சி நிர்வாகத்தில் இருந்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் மின் வாரியத்தில் இருந்து மின்வாரிய ஊழியர்களும், நகராட்சி ஊழியர்களும் இணைந்து பழுதடைந்த மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் இன்று காலையில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர்.