உசிலம்பட்டி நகர் மன்ற தலைவியின் வார்டு பகுதி சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். பொதுமக்கள் அவதியால் கண்ணீர் வடிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது உசிலம்பட்டியின் பழமை வாய்ந்த நந்தவன தெரு. நகர் மன்ற தலைவரின் வார்டு பகுதியான இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் அதிகம் நிறைந்த இந்த நந்தவன தெருக்களில் சாக்கடை கழிவு நீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாத சூழலில், ஆங்காங்கே கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசி வருகிறது. அந்த பகுதி வழியாக செல்ல முடியாத அளவு சேறும் செகதியுமாக காணப்படும் நிலை நீடித்து வருகிறது.
இதே போல் உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதிலும் தாமதம் ஏற்படும் சூழலில் நிழவுவதால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கும் நிலை நீடித்து வருகிறது.
நகராட்சி சேர்மனின் வார்டு பகுதியிலேயே சுகாதார சீர்கேட்டினால் இந்த மழை காலங்களில் நோய் தொற்று பரவும் அபாய நிலை நீடிப்பதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.