• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு

ByKalamegam Viswanathan

Oct 20, 2024

மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பில், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகளின் பக்கவாதம் நரம்பியல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடைப்பெற்றது.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் வேலம்மாள் மருத்துவமனை சார்பில் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளின் பக்கவாதம் நரம்பியல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மருத்துவக்கல்லூரி, செவிலியக்கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்கத்தான் நடைப்பெற்றது.

இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் காவல் ஆணையர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் மூன்று கிலோமீட்டர் தூரம் வாக்கத்தான் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முன்னதாக பக்கவாதம் ஏற்பட்டால் கோல்டன் அவர்ஸ் என்று சொல்லக்கூடிய அந்த மணி நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகளின் நடனம், நாடகம் நடத்தி காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் வேலம்மாள் மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல்,பக்கவாதம் மற்றும் நரம்பியல் துறை மருத்துவர்கள் கவிதா, கிருஷ்ணகுமார், முதன்மை நிர்வாக அதிகாரி மணி வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.