• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பழைய ஓய்வூதியத் அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம்

Byதரணி

Nov 15, 2022

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில மையத்தின் சார்பாக பழைய ஒய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி நடைபயணம் துவங்கியது
பழைய ஓய்வூதியத் அமல்படுத்த வலியுறுத்தி மக்களை நோக்கிய நடைபயணம் மாவட்ட எல்லையில் துவங்கி மாவட்ட அலுவலகம் வரை பெருந்திரளாக சென்று முறையிடுவது என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில மைய முடிவின்படி மதுரையில் இன்று காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலகம் முன்பிருந்து மக்களை நோக்கி நடைபயணம் துவங்கியது.


நடைபயணத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சரவணன் தலைமையேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் நடைபயண இயக்கத்தை துவங்கி வைத்தார். தமிழ்நாடு சுகாதாரப் போக்குவரத்துத் துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் நடராஜன், தமிழ்நாடு சாலைப் பராமரிப்பு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பரமேஸ்வரன், மதுரை மாநகராட்சி ஆசிரியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் முருகன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தொடர் நடைபயணத்தில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த நடைபயணம் 17.11.2022-இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைகிறது.