• Wed. Apr 23rd, 2025

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

ByP.Kavitha Kumar

Jan 30, 2025

கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் கோ ஆப்டெக்ஸின் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அரசாணைப்படி வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கோ- ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் படி, ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொது மேலாளர் முதல் 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான ஊதிய நிலையை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியை உயர்த்தியும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு 2023 ஜுலை மாதம் முதல் நடைமுறைக்கும் வரும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.