• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விசிக வினர் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம்..,

ByVelmurugan .M

Oct 8, 2025

சென்னை உயர்நீதிமன்றம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்ற கார் தன் இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படும் போலி வழக்கறிஞரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பிரதான சாலையில் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த போலி வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்ற நபர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கார் வருவதை அறிந்து தன்னுடைய ஸ்கூட்டரை வேண்டுமென்றே காரின் முன்னே சென்று திடீரென இருசக்கர வாகனத்தை நிறுத்தி தன் ஸ்கூட்டர் மீது கார் மோதியதாக அவதூறு பரப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இடிமுழக்கம், பெரம்பலூர் நகர செயலாளர் தங்க சண்முகசுந்தரம், பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் ஐயா கண்ணு, வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமாறன், ‌முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பொன்.பாவாணன், மாவட்ட துணை அமைப்பாளர் மருவத்தூர் குணசேகரன் , கை.களத்தூர் செல்வராஜ், பால் நிலவன், சேகர், வேப்பூர் ஒன்றிய பொருளாளர் கதிரவன், வழக்கறிஞர் சிவராமன், தென்றல் சரவணன், ஆட்டோ ராஜேந்திரன், ஹரிஷ், ‌ மாவட்ட துணை அமைப்பாளர் ராமர், வேல்முருகன, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.