விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் விழுப்பனூர் கிராம ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் எஸ் தமிழ்ச்செல்வன் ,துணைத்தலைவர் ஜெ.பொன்னுத்தாய் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ஐஐ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சுகாதாரம் (பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள்), ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை – உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம், குழந்தைகள் அவசர உதவி எண், முதியோர் உதவி எண் மற்றும் விவசாயிகள் கடன் அட்டை உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் கிராம நிர்வாகம் மற்றும் ஊராட்சி தலைவர் பொறுப்பு பணிகள் மக்களின் எதிர்பார்ப்பு எதிர்கால திட்டம் குறித்து ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வனிடம் உரையாடினோம்.நம்மிடம் பேசிய அவர் இந்த கிருஷ்ணன் கோவில் , திருமல்லாபுரம் அரியநாயகபுரம் , விழுப்பனூர் ஆகிய நான்கு கிராமங்களை சேர்த்து மொத்தம் இரண்டாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நான் திமுகவில் பொறுப்பில் இருக்கிறேன. இந்த முறை போட்டியின்றி தேர்வு செய்யபப்ட்டேன். இதற்கு முன் 2001-2006 வரை ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்துள்ளேன்.பல்வேறு நல்ல திட்டங்ககளையும் செய்துள்ளேன். மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் தரமான சாலை , குடிநீர் , மின்சாரம் சுகாதாரம் ஆகியவற்றை செவ்வனவே செய்து தந்துள்ளேன். கிருஷ்ணன்கோவில் மட்டும் வளர்ந்து வரும் பகுதி என்பதால் அதற்கு மட்டும் சில தெருக்களில் சாலை போடும் தாமதமாகி வருகிறது, விரைவில் அந்த பணிகளும் முடிக்கப்படும்.
கிராமத்தை பொறுத்தவரை முக்கியமான பிரச்னை சுகாதாரம். நான் ஊராட்சி தலைவராக இருந்த போது 17 கழிப்பறை, 4 சிறுவர் கழிப்பறைகள் கட்டி கொடுத்தேன்.ஆனால் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இன்னும் பொதுவெளியில் சுகாதாரம் இன்றி மலம் கழிக்கின்றனர். இதனை மேம்படுத்த மகளிர் சுயஉதவி குழு மூலம் கூட உதவி கேட்டு பராமரிக்க திட்டம் எல்லாம் வகுத்து சரியான முறையில் சென்று கொண்டிருந்தது.ஆட்சி மாறிய பிறகு 2011 கால கட்டத்திற்கு பிறகு அதுவும் கைவிடப்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் இந்த சுகாதார பிரச்சனையை முதல் பிரச்சனையாக கருதி மோட்டார்கள் அனைத்தும் சரி செய்து, நூறு நாள் வேலை பார்ப்பவர்கள் இனி பொதுவெளியை கழிப்பிமாக பயன்படுத்தாமல் பொதுகழிப்பிடத்தை பயன்படுத்தினால் மட்டுமே வேலைக்கு வர வேண்டும் என்று அதிகாரி கூறி உள்ளதாக சமீபத்தில் நடைபெற்ற மீட்டிங்கில் கூரியுள்ளேன் அதனால் இதற்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்பகுதியை பொறுத்தவரை விவசாயம் பிரதானமாக பார்க்கபடுகிறது.நெல் , மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவை பயிரிடபடுகிறது. இது தவிர மக்கள் அருகிலுள்ள மில் , தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இந்த விழுப்பனூரை பொறுத்த வரையில் செலவுக்காக ரூ.35 ஆயிரம் மட்டுமே கொடுக்கிறது. கடந்த நான்கு மாதம் இந்த தொகை கூட வரவில்லை எனது சொந்த செலவில் பணிகளை மேற்கொண்டேன். அப்படி இருக்க என்றோ எடுத்த மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வெறும் ரூ.35 ஆயிரம் கொடுப்பது போதுமானதாக இல்லை. அதனால் இந்த தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று இதன் மூலம் அரசுக்கு கோரிக்கையாக விடுகின்றேன் என்று அவர் கூறினார்.


