விருதுநகர் மாவட்டம்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் விழுப்பனூர் ஊராட்சியில் இன்று முதல் 3 நாட்கள் தீவிர தூய்மைபணிகள் நடைபெற உள்ளதாக தலைவர் சீ.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ,அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மாவட்ட முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணிகளைமேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.இந்த தகவலை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் விழுப்பனூர் ஊராட்சி தலைவர் சீ தமிழ்ச்செல்வன் நம்மிடம் பேசும் போது.
விழுப்பனூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தீவிர தூய்மை பணிகளை செயல்படுத்த உள்ளோம்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கிய குப்பைகளை அகற்றவும் செடி கொடிகள் அகற்றி தூய்மைப்படுத்துகிறோம் .மேலும் ஆரம்ப சுகாதார நிலையம்,கிருஷ்ணன்கோயில் பேருந்து நிலையம், கிருஷ்ணன் கோயில் அருகே அமைந்துள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகப்பகுதியிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளப்படுகிறது.
மக்கள் அதிகமாக கூடும் வணிக வளாகங்கள்,காய்கறி கடைகள் ,கிருமி நாசினி தெளித்து துய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது…மேலும் பேருந்து நிழற்குடைகள் அனைத்து அரசு அலுவலகங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணிகள் நடைபெற உள்ளன.
அதே போல கோயில்பகுதிள், விழுப்பனூர் மேல்நிலைப்பள்ளி,மற்றும் உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ,சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுகிறது.அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் சுத்தம் செய்து குளோரினேசன் தெளித்திடவும், வாறுகால் சுத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் விழுப்பனூர் ஊராட்சி தலைவர் சீ.தமிழ்ச்செல்வன் கூறும் போது இப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி சாக்கடைகளை சுத்தபடுத்தி ,விழுப்பனூர் ஊராட்சி மாவட்டத்தில் மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்றார்.