• Mon. Apr 21st, 2025

தூரத்தில் தெரியும் வெளிச்சம்

தூரத்தில் தெரியும் வெளிச்சம் – நம்பிக்கையுடன் காத்திருக்கும் விஜயதரணி.

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பொது வெளியில் வைத்து அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி கடந்த பிப்ரவரியில் பாஜக-வில் இணைந்தார் விளவங்கோடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான விஜயதரணி. தற்போது பாஜக-விலும் அதே நிலை இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் விரைவில் எனக்கான அங்கீகாரம் பாஜக-வில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என விஜயதரணி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் நடைபெற இருக்கும் மாற்றத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிடும் என இருக்கும் நிலையில், குமரி மாவட்டத்தில் பாஜக ஒரே மாவட்டமாக இருப்பதை இரண்டு மாவட்டமாக பிரித்து இரண்டு மாவட்ட தலைவர்களை அகில இந்திய பாஜகவின் அனுமதி பெற்று தமிழக தலைமை அறிவிக்க இருக்கும் நிலையில், குமரி மாவட்ட பாஜகவின் கோஷ்ட்டி பூசல்கள் பட்டவர்த்தனமாக வெடித்து சிதறும் சூழலில். பாஜகவின் கிழக்கு மாவட்ட தலைவர் பதவியை பிடிக்க பலரும் காய் நகர்த்தலில் இருக்கும் நிலையில், இளைஞர்களின் பெரும் பாலோர் பொதுப்படையாக வெளியில் பரப்பும் தகவல். குமரி கிழக்கு மாவட்ட பாஜகவின் தலைவராக கட்சியில் துடிப்பு மிக்க இளைஞருக்குத்தான் தலைவர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற பரப்புரை பளிச்சென்று பொதுவெளியில் தெரிகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தின் பாஜக அரசியலில்விஜயதரணியை நினைவில் யார் வைத்திருக்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.