• Mon. Apr 28th, 2025

அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடிய விசிக-வினர்

ByR. Vijay

Apr 14, 2025

நாகையில் கிராம மக்களுக்கு கறி சாப்பாடு போட்டு, அம்பேத்கர் பிறந்தநாளை விசிக-வினர் கொண்டாடினர்.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை தாமரை குளம் தென்கரையில் நாகை நகரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, கிராம மக்களுக்கு கறி விருந்து சமைத்து வாழை இலையில் சாப்பாடு பறிமாறப்பட்டது. இதில் நாகை நகர செயலாளர் முத்துலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.