• Tue. Apr 22nd, 2025

வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழா!!

ByR. Vijay

Apr 14, 2025

நாகை அருகே கீழ்வேளூர் அருள்மிகு வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் ஆலய சித்திரை தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பழமை வாய்ந்த அருள்மிகு வல்லாங்குளத்து முத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் பால் குடத்துடன் பூக்குழி இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினைக் கொண்டு அம்மனுக்கு தொடர் பாலாபிஷகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு காளியாட்டம் உள்ளிட்ட இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.