• Fri. Apr 18th, 2025

நாம் தமிழர் கட்சியினர் நாகூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

ByR. Vijay

Apr 13, 2025

வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் நாகூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை பாராளுமன்ற தொகுதி செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டத்தை தெரிவித்தனர். அப்போது வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.