நடிகர் மகேஷ்பாபு தெலுங்கின் சூப்பர் ஸ்டாராக உள்ளார். வரும் 12ம் தேதி அவரது சர்க்காரு வாரி பட்டா படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதமே படம் ரிலீசாக இருந்த நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசானதையொட்டி படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப் போனது.
இந்நிலையில் தற்போது மே மாதம் 12ம் தேதி சர்வதேச அளவில் சர்க்காரு வாரி பட்டா படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முதல் முறையாக மகேஷ்பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பிரம்மபுத்ராவில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் படத்தில் ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ட்ரெயிலர் வெளியான 24 மணிநேரத்தில் 25 மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது. படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
படம் பிரமோஷன் வேலையை முன்னிட்டு, படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் வரும் 7ம் தேதி நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் மகேஷ் மற்றும் விஜய் இருவரும் நீண்டகால நண்பர்கள். மேலும் தற்போது தளபதி 66 படத்திற்காக விஜய் ஐதராபாத்தில் சூட்டிங்கில் உள்ள நிலையில், அவர் இந்த பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.