• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கே டி ஆர் தலைமையில் நகர பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்..,

ByK Kaliraj

May 23, 2026

அதிமுக முன்னாள் அமைச்சரும்,விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து மேற்கு மாவட்ட ,ஒன்றிய, நகர பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகர், சிவகாசி ,ஸ்ரீவில்லிபுத்தூர் ,ராஜபாளையம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.