கேரளாவில் நடைபயணம்மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில், ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். “இந்தியா ஒற்றுமைப் பயணம்” என்ற பெயரில் நடைபெற்றுவரும் இந்த பிரசாரம், கன்னியாகுமரியில் தொடங்கியது.
தமிழகத்தில் தனது நடைபயணத்தை முடித்துக் கொண்ட ராகுல் காந்தி தற்போது கேரளாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் இன்று ஆலப்புழாவில் புன்னமடா ஏரியில் நடைபெற்ற பாரம்பரிய பாம்பு படகுப் போட்டியில் பங்கேற்றார்.
பலத்த ஆரவாரங்ளுக்கு இடையே, ராகுல் காந்தி படகில் துடுப்பை வீசினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பு படகு போட்டியில் பங்கேற்ற ராகுல் காந்தி !!!வைரல் வீடியோ
