• Thu. Apr 25th, 2024

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

ByA.Tamilselvan

Mar 3, 2023

தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாடகளாக சென்னையில் அதிகவேகமாக பரவிய காய்ச்சல் தொற்று தற்போது தமிழகம் முழுவதும் பரவிவருகிறது.காய்ச்சல் தொற்று 5 நாட்களுக்கு நீடிப்பதாகவும் ,மேலும் இருமல் ,சளி தொந்தரவுகள் 7நாட்களுக்கு மேல் நீடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல், தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீத பேருக்கு influenza வைரஸ் பாதிப்பு உள்ளது. இது உயிர்க்கொல்லி வைரஸ் அல்ல, மக்கள் அச்சப்பட வேண்டாம் .காய்ச்சல் இருந்தால் சொந்தமாக மருந்து எடுத்து கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும். கோடையில் குறைய தொடங்கும் காய்ச்சல் பாதிப்புகள், நடப்பாண்டில் மார்ச் மாதம் பிறந்தும் தொடர்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *