• Fri. Apr 19th, 2024

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி 2024 டிசம்பரில் துவங்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

Byp Kumar

Mar 2, 2023

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி 2024 டிசம்பரில் துவங்கும் என மதுரை 1.02 கோடி மதிப்பில் கட்டண படுக்கை வசதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த பின் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் 16 கட்டண படுக்கை வசதிகளை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி மருத்துவர் கல்லூரி மருத்துவமனையின் டீன் ரத்னவேல் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.கட்டண படுக்கையறையை திறந்து வைத்து அமைச்சர் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளிடம் பேசும் போது: சென்னையில் செயல்பட்டு வரும் இத்திட்டம் முதல்வர் ஆலோசனைப் படி கோவை, சேலம், மதுரைக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. சேலத்தில் 15 நாட்களுக்கு முன்பு கட்டண படுக்கை வசதி திறந்து வைக்கப்பட்டது. தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் 16 கட்டண படுக்கை வசதி 1.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த அறைகளுக்கு ஒரு நாளுக்கு சாதாரண அறை 1200 ரூபாய்க்கு, குளிரூட்டப்பட்ட அறைக்கு 2 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும்.கடந்த 2021 ஜூலையில் திறந்து வைக்கப்பட்ட மூன்றாம் பாலின அறுவை சிகிச்சை பிரிவு தென்னிந்தியாவில் அதிகப்படியான அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்து உள்ளது. முன்பு அறுவை சிகிச்சை செய்ய மும்பை, தாய்லாந்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 232 நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது இதில் 106 பேர் திருநங்கைகள் 126 பேர் திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில் 110 பேருக்கு முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.செயற்கை கருத்தரித்தல் மையம் சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் விரைவில் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 2:50 கோடி செலவில் உபகரணங்கள் கொள்முதல் செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன.மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைகளில்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்தின் நிதி மூலம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டது. தொடர்ச்சியாக மத்திய அரசிடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 2024 டிசம்பரில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கி 2028 டிசம்பரில் இறுதியில் முடிவடையும் என என குறிப்பிட்டார்.
மதுரை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 5000க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகை புரிகின்றனர். அவர்களின் வசதிக்காக கூடுதல் கட்டிடம் அமைக்கப்பட்டு விரைவில் அதை மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *