மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட வாசிநகர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள பெண்களுக்கு கழிப்பறை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக ஒரு பாதை வழியாக சென்று இயற்கை உபாதைகள் கழிப்பதாகவும் மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களுக்கு ஆடு மாடுகளை அழைத்துச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற நபர் அந்தப் பாதையை தனக்கு சொந்தம் எனக் கூறி வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், முறையாக குடிநீர், முறையான கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்தர வேண்டும் என உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார்- கோரிக்கை புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம பொதுமக்களிடம் சார் ஆட்சியர் உறுதியளித்தார்.




