• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மழை பெய்யாததால் வறண்ட நங்காஞ்சியாறு அணை..,

இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு மழை பெய்யாத நிலையில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்ததால் அணை வறண்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்
வடகாடு கிராமத்தில் பரப்பலாறு அணை இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மலை முகடுகளுக்கு இடையே ரம்மியமாக அமைந்துள்ளது,

2023 ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பரப்பலாறு அணையில் இருந்து ஆற்றின் மூலம் இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு தண்ணீர் வந்தது.

அணையில் மொத்த கொள்ளவு 39.7 அடி தண்ணீர் நிரம்பி வழிந்தது.

இந்த அணையால் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
அதே போல சுற்றுப்புர கிராமப்பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதானல் விவசாய பணிகள் அதிகளவு நடைபெற்று வந்தது.

நங்காஞ்சியாறு அணையில் இருந்து கரூர் அமராவதி ஆற்று வழியாக கடலில் சென்று தண்ணீர் வீணாக கலந்தது. வாய்க்கால்கள் புதர் மண்டி கிடப்பதால் விவசாயிகளுக்கு எந்தவித பலனும் அளிக்கவில்லை.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது 24 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சரியான மழை பெய்யாததால் இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு தண்ணீர் முற்றிலும் வரவில்லை.

கடந்த சில மாதங்களாக கடுமையான வெயிலால் அணை வறண்டு 15.09 அடியாக குறைந்து தொடர்ந்து மழை பெய்யாத நிலையில் வறண்டு வருகிறது.

அணையின் உட்பகுதியில் பள்ளங்களில் மட்டுமே தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இதானல் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து குடகனாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்க தலைவர் டி.ராமசாமி கூறியதாவது: அணை கட்டப்பட்டு 18 ஆண்டுகள் ஆன நிலையில் அணையின் உட்பகுதியில் வண்டல் படிந்து இருப்பதால் அணையில் முழுமையாக தண்ணீர் தேக்கினாலும் பயன் இல்லாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

அணையை தூர்வாரியும், மற்றும் புதர் மண்டி கிடைக்கும் வாய்க்கால்கள் சீரமைத்து வருகின்ற வடகிழக்கு பருவமழையின்போது பெய்யும் மழையால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதுதையும் தேக்கி வைத்தால் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.