தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து பஞ்சாயத்தில் ராமச்சந்திரபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் .இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கிராமத்திற்கு சரியான முறையில் குடி தண்ணீர் வராத காரணத்தால் இன்று காலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து காலி குடங்களுடன் ஆண்டிபட்டி எம்.சுப்புலாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலில் அக்கிராமத்து மக்கள் ஈடுபட்ட சம்பவம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் . மேலும் கலைந்து செல்லாததால் ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்க கிருஷ்ணன் தலைமையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்பு டிஸ்பி . தங்ககிருஷ்ணன் அக்கிராமத்து மக்களிடம் பேசினார் .இதனையடுத்து தங்கள் கிராமத்துக்கு உடனடியாக குடிதண்ணீர் வேண்டும் என்றும் தாங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் குடிதண்ணீைரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம் என்றும் அக்கிராமத்து மக்கள் கோரிக்கை வைத்தனர். அக்கிராமத்து மக்களின் கோரிக்கையினை ஏற்று உடனடியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது .இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.