• Sat. Apr 20th, 2024

பறக்கும் படை வணிகர்களை துன்புறுத்தக்கூடாது!

Byadmin

Jan 31, 2022

ஒருங்கினைந்த கோவை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாக வசதிக்காக பொள்ளாச்சியை புதியதொரு வணிக மாவட்டமாக செயல்படுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை, கிணத்துக்கடவு, வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஞாயிறு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய முதல்வருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ,

மேலும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்த அரசு பொள்ளாச்சியை தனி மாவட்டமாக விரைவில் அறிவிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு நிறுவனங்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் கொண்ட கமிட்டி அமைத்து விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து வால்பாறையை சரணாலய பகுதியில் இருந்து விடுவிக்க வேண்டும், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் அதிகாரிகள் பொருட்கள் வாங்க செல்லும் வணிகர்களை பறக்கும் படையினர் துன்புறுத்தக்கூடாது, உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்!

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொள்ளாச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கோவை மண்டல தலைவர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் இருதயராஜ், பொள்ளாச்சி வட்டார வியாபாரிகள் தலைவர் சக்திவேல், செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் அமீர் அம்சா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *