• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணி வேண்டி கிராம பெண்கள் திண்டுக்கல் திடீர் பஸ் மறியல்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை ஊராட்சி ஆத்தூர்பிள்ளையூர், கரையாம்பட்டி ஆகிய ஊர்களில் மழை பெய்யாதால் விவசாய பணிகள் நடைபெறாத நிலையில் ஏழை எளிய மக்கள் மிகுந்த சிரமத்தோடு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 125 நாட்கள் பணி வேண்டி நாகையகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை அனுகி ஊராட்சி செயலரிடம் பலமுறைஊர் பெண்கள் கோரிக்கை வைத்தும் பணி வழக்குவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் புதுரோட்டில் திண்டுக்கல் – கரூர் மாநில நெடுஞ்சாலையில் திரண்டு வந்து திடீர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பணி வேண்டி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு எரியோடு போலீசார் விரைந்து வந்து பஸ் மறியல் செய்தவர்களிடம் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்த பின்பு கிராம பெண்கள் பஸ் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு படி வேண்டி பொதுமக்கள் பஸ் மறியல் போராட்டத்தில் கிராம பெண்கள் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.